Home One Line P1 “இப்போதைக்கு நெடுஞ்சாலை கட்டணத்தை நீக்க இயலாது!”- மகாதீர்

“இப்போதைக்கு நெடுஞ்சாலை கட்டணத்தை நீக்க இயலாது!”- மகாதீர்

643
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தற்போது நெடுஞ்சாலைக் கட்டண வசூலை நீக்க இயலாது எனவும், வேண்டுமானால் நாட்டின் நெடுஞ்சாலைகளில் விதிக்கப்பட்டுள்ள வீதத்தைக் குறைக்கும் சுமையை அரசாங்கத்தால் ஏற்க முடியும் என்றும் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை குறைக்க உதவ முன்வரும் எந்தவொரு தனியார் நிறுவனத்தையும் பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், கடந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர் தங்கள் தேர்தல் அறிக்கையில் நம்பிக்கைக் கூட்டணி அளித்த வாக்குறுதியின்படி, உடனடியாக நெடுஞ்சாலைக் கட்டணத்தை இரத்து செய்ய முடியாது என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சாலைக் கட்டணங்களை அகற்றுவதற்கான மக்களின் சுமையை குறைக்க நேரம் எடுக்கும், ஆனால் கட்டணத்தை குறைப்பதன் மூலம் அதனை சமாளிக்க இயலும்.என்று அவர் தெரிவித்தார்.