வாஷிங்டன்: சீனாவில் உய்குர் இன மக்களுக்கு எதிரான அந்நாட்டு அரசு அதிகபடியான வன்முறை நடவடிக்கைகளை நடத்தி வந்தததைத் தொடர்ந்து அமெரிக்கா, சீனாவைச் சேர்ந்த 28 அமைப்புகளைத் தடுப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மேற்கில் சிஞ்சியாங் பகுதியில் வசிக்கும் இம்மக்களுக்கு அதிகபடியான தொந்தரவுகளை சீன அரசு வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா தடை செய்த நிறுவனங்களிடமிருந்து, இனி எந்தப் பொருட்களையும் கொள்முதல் செய்ய முடியாது. இந்நிறுவனங்கள் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா வணிக துறையின் தரவு குறிப்பிடுகிறது.
விசாரணையின்றி இலட்சக்கணக்கான முஸ்லிம்களை சீன அரசு அடைத்து வைத்திருப்பதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.