Home One Line P1 தஞ்சோங் பியாய்: கெராக்கான் போட்டியிட வாய்ப்பு!

தஞ்சோங் பியாய்: கெராக்கான் போட்டியிட வாய்ப்பு!

719
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எட்டு இடைத்தேர்தல்களிலும் போட்டியிடாத கெராக்கான் கட்சி, வருகிற தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அதன் தலைவர் டொமினிக் லாவ் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து வெளியேறிய கெராக்கான், இன்னும் அரசியல் கட்சியாக இருப்பதால் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற தூண்டுதல்கள் இருப்பதாக அவர் கூறினார்.   

நாங்கள் போட்டியிடப் போகிறோமோ இல்லையோ, ஆயினும், நாங்கள் பல்வேறு கட்டங்களை கடந்து செல்ல வேண்டும்.”

#TamilSchoolmychoice

நாங்கள் ஓர் அரசியல் கட்சி என்பதால் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் பங்கேற்குமாறு அறிவுறுத்திய அடிமட்ட கட்சி உறுப்பினர்களிடமிருந்து எங்களுக்கு நிறைய கருத்துக்கள் கிடைத்தனஎன்று கோலாலம்பூரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் லாவ் கூறினார்.

ஓர் அரசியல் கட்சியாக, நாங்கள் போட்டியிடவில்லை என்றால், நாங்கள் பங்கேற்காத ஒன்பதாவது இடைத்தேர்தலாக இது இருக்கும்.”

எனவே, கெராக்கான் இப்போது இந்த தேர்தலில் பங்கேற்பதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார். இந்த விவகாரத்தில் இறுதி முடிவு அடுத்த வாரம் எடுக்கப்படும்.” என்று அவர் குறிப்பிட்டார்.