Home நாடு வரலாற்று நாளில் பிரதமருடன், துணைப் பிரதமர் எடுத்துக் கொண்ட “நம்படம்”

வரலாற்று நாளில் பிரதமருடன், துணைப் பிரதமர் எடுத்துக் கொண்ட “நம்படம்”

781
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று வெள்ளிக்கிழமை அக்டோபர் 12, 2020-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் லிம் குவான் எங் சமர்ப்பித்த வரலாற்று நாளாகும்.

தனது வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் வாசிக்க லிம் குவான் எங் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், பிரதமர் துன் மகாதீர் அருகில் அமர்ந்திருந்த துணைப் பிரதமர் வான் அசிசா, “உங்களுடன் ஒரு நம்படம் (wefie) எடுத்துக் கொள்ளட்டுமா?” எனக் கேட்க, சிரித்துக் கொண்டே பிரதமரும் சம்மதித்தார்.

அந்தக் காட்சிகளை தொலைக்காட்சியில் நேரலையாக பொதுமக்களும் கண்டு இரசித்தனர்.

#TamilSchoolmychoice

மேலே காண்பதுதான் அந்தப் புகைப்படம்!