Home One Line P1 வரவு செலவுத் திட்டம் 2020 – வணிகங்களுக்கான சாதகங்கள் – தாக்கங்கள் என்ன?

வரவு செலவுத் திட்டம் 2020 – வணிகங்களுக்கான சாதகங்கள் – தாக்கங்கள் என்ன?

965
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் லிம் குவான் எங் சமர்ப்பித்த 2020-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மலேசியாவில் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுவான வணிகங்களுக்குக் கிடைக்கப் போகும் சாதகங்கள் என்ன? – அதனால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் என்ன? என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்:

  • வரவு செலவுத் திட்டத்தின் நோக்கங்களே வணிகத்தை மையமாகக் கொண்டுதான் வகுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய இலக்கு பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவது, மின்னியல் சகாப்தத்தை உருவாக்குவது, மனித ஆற்றலை உயர்த்துவது, அரசாங்கப் பொது அமைப்புகளையும் நிதி நிலைமையையும் சீர்ப்படுத்துவது என்பதாகும்.
  • ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை மீண்டும் கொண்டுவரப்பட மாட்டாது.
  • இ-வாலட் எனப்படும் மின்னியல் முறையிலான பணப் பரிமாற்றங்களை ஊக்குவிக்க, 18 வயதுக்கும் மேற்பட்ட – ஆண்டுக்கு 100,000 ரிங்கிட் வருமானம் கொண்ட – மலேசியர்களுக்கு 30 ரிங்கிட் ஒரு தடவை வழங்கப்படும்.
  • 2020 மலேசியாவுக்கு வருகை தாருங்கள் ஆண்டு என்பதால் சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சுக்கு 1.1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுலா சார்ந்த வணிகங்கள் பயன்பெறும்.
  • பதிவு செய்யப்பட்ட பாலர் பள்ளிகளுக்கு தங்களின் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் 1,000 ரிங்கிட் வரிச் சலுகை அடுத்த ஆண்டு முதல் 2,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படுகிறது.
  • குறைந்தபட்ச சம்பளம் 1,200 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்படுகிறது.
  • பள்ளிகளுக்கான மேம்பாடுகளுக்கும், பராமரிப்புக்கும் 2019-இல் ஒதுக்கப்பட்ட 652 மில்லியன் தற்போது 735 மில்லியனாக 2020-இல் உயர்ந்திருப்பதால் குத்தகையாளர்களுக்கு கூடுதல் குத்தகை வாய்ப்புகள் கிடைக்கும்.
  • கிராமப்புற சாலைகள் நிர்மாணிப்பிற்காக 1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக சபா, சரவாக் மாநிலங்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவும், குத்தகையாளர்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • அறப்பணிகளுக்கும் விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் தேசிய நலன்களுக்கான திட்டங்களுக்கும் நன்கொடை வழங்கும் நிறுவனங்களுக்கு தற்போது வழங்கப்படும் 7 விழுக்காட்டு சலுகை 10 விழுக்காட்டாக உயர்த்தப்படுகிறது.