Home One Line P1 சிலாங்கூர் சுல்தான்: போலி இடுகைகளை வெளியிட்டதற்கான விசாரணைக்கு வர நஜிப் ஒப்புதல்!

சிலாங்கூர் சுல்தான்: போலி இடுகைகளை வெளியிட்டதற்கான விசாரணைக்கு வர நஜிப் ஒப்புதல்!

914
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷாவை அவமதித்ததாக கூறப்படும் முகநூல் பக்கம் விவகாரமாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விரைவில் புக்கிட் அமானில் விசாரிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தாங்கள் நஜிப்பை தொடர்பு கொண்டதாக புக்கிட் அமான் (வழக்கு மற்றும் சட்டப் பிரிவு) முதன்மை உதவி இயக்குநர் மியோர் பாரிடாலத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.

விசாரணைக்கு எங்களுக்கு உதவ புக்கிட் அமானுக்கு விரைவில் வர அவர் ஒப்புக் கொண்டார். இந்த வழக்கை நாங்கள் தேசத் துரோகம் மற்றும் அவதூறு என்று வகைப்படுத்தியுள்ளோம். அதன்படி விசாரித்து வருகிறோம். நாங்கள் ஏற்கனவே தேசத் துரோக விசாரணையை முடித்துவிட்டோம், அவதூறு கோணத்தை இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்,” என்று அவர் நேற்று வெள்ளிக்கிழமை புக்கிட் அமானில் கூறினார்.

இதனிடையே, பேராக் ஜசெக தலைவர் ங்கா கொர் மிங் நஜிப்புக்கு எதிராக காவல் துறையில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷாவை அவமதித்ததாகக் கூறிய குற்றச்சாட்டில் ங்கா கடந்த செவ்வாய்க்கிழமைதனது அறிக்கையை புக்கிட் அமான் தலைமையகத்தில் பதிவு செய்திருந்தார்.

#TamilSchoolmychoice

சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷாவை வெறுக்கக் கூறி சீனர்களைத் தூண்டியதாகக் கூறப்படும் ‘ங்கா கொர் மிங் சூப்பர் பேன்ஸ் கிளப்’ முகநூல் கணக்கு உரிமையாளருக்கு எதிராக சிலாங்கூர் சுல்தானின் பாதுகாவலர் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.

அந்த பதிவுக் குறித்து நஜிப்பும் தனது முகநூல் கணக்கு மூலம் பகிர்ந்து கொண்டு  அதை ங்கா உடன் இணைத்துப் பேசினார்எவ்வாறாயினும்அந்த முகநூல்  கணக்கு போலியானது என்றும்அது தமக்கு தீங்கிழைக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் ங்கா வலியுறுத்தினார்.

தனக்கும் ஜசெகக்கும் எதிராக மக்கள் மத்தியில் வெறுப்பைத் தூண்டுவதற்காக முகநூலில் போலி இடுகைகளை வெளியிட்டதற்காக மலேசியர்களிடம் நஜிப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ங்கா கோரினார்.