Home One Line P1 விடுதலைப் புலிகள்: “ஆதாரம் இருந்தால் சட்ட முறையைப் பின்பற்றுங்கள், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது!”- எம்.சரவணன்

விடுதலைப் புலிகள்: “ஆதாரம் இருந்தால் சட்ட முறையைப் பின்பற்றுங்கள், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது!”- எம்.சரவணன்

1881
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக பல நபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன்குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றார்.

இது தேசிய பாதுகாப்பை உள்ளடக்கியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், அவர்கள் குற்றவாளிகள் இல்லை எனில் அவர்கள் துன்புறுத்தப்படுவதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

#TamilSchoolmychoice

குற்றம் செய்திருந்தால் அவர்கள் குற்றவாளிகளே. அப்பாவிகள் துன்புறுத்தப்படக் கூடாது. ஏதேனும் ஆதாரம் இருந்தால், தற்போதுள்ள சட்ட முறையைப் பின்பற்றுங்கள்என்று அவர் கூறினார்.

முன்னதாக, புக்கிட் அமான் காவல் துறை நடவடிக்கையில் இரண்டு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்ட நிதிகளை ஊக்குவித்தல், ஆதரித்தல், வைத்திருத்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றுடன் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

காவல் துறையினர் ஏழு பேரிடம் விசாரணை நடத்த 28 நாட்கள் இருப்பதாகவும், விசாரணைக்கு உதவுவதற்காக அதிகமான நபர்கள் தடுத்து வைக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் புக்கிட் அமான் பயங்கரவாத உதவித் தலைவர் அயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.