Home One Line P0 “நாம் தமிழர்” கட்சியின் தலைவர் சீமானுக்கு மலேசியாவில் தடை விதிக்கப்படலாம்

“நாம் தமிழர்” கட்சியின் தலைவர் சீமானுக்கு மலேசியாவில் தடை விதிக்கப்படலாம்

1223
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தோடு தொடர்புடையவர்களைக் கைது செய்து வரும் காவல் துறை தமிழகத்தில் இயங்கிவரும் ‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரோடு தொடர்புடையவராகக் கருதப்படுவதற்கு ஆதாரங்கள் இருந்தால் அவர் மலேசியாவில் நுழைவதற்குத் தடை விதிக்கும் என புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் சிறப்புப் பிரிவுக்கான தலைவர் டத்தோ அயூப் கான் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தொடர்பில் ஏற்கனவே ஒரு முறை மதிமுக தலைவர் வைகோ மலேசியா நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியின் தலையீட்டால் அவர் அண்மையில் மலேசியா வந்து சென்றார்.

இந்தியப் பிரதமர் மோடியிடமும் மலேசியாவில் நுழைவதற்கு தன்மீது விதிக்கப்பட்டிருக்கும் தடை குறித்து வைகோ முறையிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

சீமான் மலேசிய அரசியல்வாதிகளைச் சந்திப்பதற்குப் பலமுறை இங்கு வந்து சென்றிருக்கிறார் என்பதும் காவல் துறைக்குத் தெரியும் என அயூப்கான் கூறினார்.

எனினும் இது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை எனக் கூறிய அயூப்கான் சீமான் விடுதலைப் புலிகளுக்கான நிதியைக் கையாள்வதிலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தை முன்னெடுப்பதிலும் எவ்வளவு ஆழமாகவும், விரிவாகவும் சீமான் செயல்படுகிறார் என்பது குறித்து தாங்கள் விசாரணை நடத்தி வருவதாகவும் அயூப்கான் குறிப்பிட்டார்.

ஆதாரங்கள் இருந்தால் அவரை மலேசியாவில் நுழைவதற்கு தடை செய்ய குடிநுழைவுத் துறையைக் கேட்டுக் கொள்வோம் என்றும், இன்று புக்கிட் அமானில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் மேலும் கூறினார்.

இதுவரையில் விடுதலைப் புலிகள் தொடர்பில் 12 பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.