Home நாடு எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செல்லியலின் நல்வாழ்த்துகள்

எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செல்லியலின் நல்வாழ்த்துகள்

638
0
SHARE
Ad

இன்று திங்கட்கிழமை அக்டோபர் 14 முதல்  தொடங்குகின்றன எஸ்பிஎம் தேர்வுகள்!

மலேசிய மாணவர்களின் கல்விப் பயணத்தில் மிக மிக முக்கியமானத் தேர்வுக் களம் எஸ்பிஎம் எனப்படும் 11-வது கல்வியாண்டுக்கான தேர்வுகள்.

ஒரு மாணவனின் 11 ஆண்டுகால பள்ளிப் படிப்பை மதிப்பீடு செய்யும் தேர்வாகவும், அந்த மாணவனின் அடுத்த கல்வி நகர்வு என்ன என்பதை நிர்ணயிக்கும் ஒரு முக்கியப் புள்ளியாகவும் எஸ்பிஎம் தேர்வுகள் திகழ்கின்றன.

#TamilSchoolmychoice

2019-ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வுகள் எழுதும் அனைத்து மாணவர்களும் சிறந்த முறையில் தேர்ச்சியடைய செல்லியல் சார்பில் எங்களின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம் நாட்டில் தமிழ் மொழி, மாணவர்களிடையே ஒரு பாடமாக தொடர்ந்து நீடித்திருக்கச் செய்வதும் எஸ்பிஎம் தேர்வுகள்தான்.

தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் படித்துவிட்டு இடைநிலைப் பள்ளிகளுக்கு வரும் இந்திய மாணவர்கள் தங்களின் தமிழ் மொழி ஆர்வத்தையும், புலமையையும் சீர்படுத்தியும், கூர்படுத்தியும் வைத்திருக்க பி.டி.3 தமிழ்மொழி தேர்வுகளும், எஸ்பிம் தேர்வுகளில் அவர்கள் எடுக்கும் தமிழ் மொழி, மற்றும் தமிழ் இலக்கியம் பாடங்களும் மிகவும் உதவுகின்றன.

அந்த வகையில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் பாடங்களை எடுக்கும் இந்திய மாணவர்கள் இந்தப் பாடங்களில் சிறந்த முறையில் தேர்ச்சி பெறவும் செல்லியல் குழுமம் சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.