Home 13வது பொதுத் தேர்தல் பிரதமருக்கு எதிராக போட்டியிட மாணவர் நிறுத்தப்படலாம்?

பிரதமருக்கு எதிராக போட்டியிட மாணவர் நிறுத்தப்படலாம்?

521
0
SHARE
Ad

Najib-2---Sliderகோலாலம்பூர், ஏப்.6- ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் பிரபல தலைவர் காமராஜரை எதிர்த்து ஒரு மாணவரான சீனிவாசன் என்பவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றது வரலாறு.

அதைப் போன்றதொரு வரலாறு இப்போது மலேசியாவில் திரும்புகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வரக் கூடிய தேர்தலில் பிரதமர் நஜிப் போட்டியிடும் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் களம் இறங்கலாம் என்று நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

மலாயா பல்கலைக்கழக  அரசியல்  அறிவியல் மாணவர் முகமட் புகாரி சுயேட்சை வேட்பாளராக பெக்கான் தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

23 வயதான முகமட் புகாரி தனது பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதி சபை உறுப்பினராகவும்   தேசிய  மாணவர்கள் பிரதிநிதி குழுவின் தலைவராக உள்ளார்.

சொலிடாரிடி மகாசிஸ்வா மலேசியா என்ற மாணவர் அமைப்பின் தலைவரான முகமட் சஃப்வான் கூறுகையில் “கடந்த மாதம் ஆளுங் கட்சி எதிர்க்கட்சி இரு தரப்பினருக்கும் இது குறித்து அறிக்கை அனுப்பி இருந்தோம். ஆனால் இருத் தரப்பினரிடம் இருந்தும் பதில் வரவில்லை என்றும், ஆதலால் மாணவர்களின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

இது குறித்து முகமட் புகாரியிடம் கேட்டபோது தன்னால் முடிந்தளவு பெக்கான் தொகுதியின் வெற்றிக்கு பாடுபடுவேன் என்றார்.

இருப்பினும், இந்த மாணவர் தலைவரை மக்கள் கூட்டணி ஆதரிக்குமா அல்லது பிரதமரை எதிர்த்து தங்களின் சொந்த வேட்பாளர் ஒருவரை நிறுத்துமா என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.