Home One Line P1 “நான் கட்சியில் தொடர்ந்து நிலைத்திருப்பேன்!”- அஸ்மின் அலி

“நான் கட்சியில் தொடர்ந்து நிலைத்திருப்பேன்!”- அஸ்மின் அலி

637
0
SHARE
Ad

கோலாலம்பூர்:  கட்சியை விட்டு வெளியேற மாட்டேன் என்று பிகேஆர் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

அஸ்மினின் கூற்றுப்படி, அவரும் கட்சித் தலைவர்களும் கடந்த தேர்தலில் கட்சி உறுப்பினர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்றதால் அவ்வாறு செய்யத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எவ்வாறாயினும், சில தரப்புகள் பொறாமைப்பட்டு அவரை வெளியேற்ற விரும்பினால், அது கட்சியின் தலைமைத்துவத்திடம் என்று பொருளாதார விவகார அமைச்சருமான அவர் கூறினார்.

நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனக்கு பிகேஆரில் ஒரு பெரிய பணி வழங்கப்பட்டுள்ளது. நான் மட்டுமல்ல, எங்கள் முழு பிகேஆர் கட்சியும், கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆகவே, கட்சியிலிருந்து என்னை வெளியேற்றுவதில் யாராவது முற்பட்டால் மட்டுமே, நான் கட்சியை விட்டு வெளியேற காரணமாக இருக்கும். அது அவர்களுடைய கையில் உள்ளது.”

ஆனால், நான் கட்சிக்கு உறுதியாக இருக்கிறேன். கட்சியில் நீடிப்பேன். கட்சியை கட்டியெழுப்புவேன்.  தலைமை மற்றும் உறுப்பினர்களையும் ஆதரிப்பேன்என்று அவர் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் கூறினார்.

டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிமுடனான அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக அஸ்மின் புதிய கட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதை நிராகரிக்கவில்லை என்று பிகேஆர் அரசியல் பணியகம் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர் சைட் ஹுசேன் சைட் அலி கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் இதைக் கூறினார்.

மலேசியர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்ற துன் டாக்டர் மகாதீரின் வெற்றியைக் கண்டு அவர் பொறாமைப்படலாம். ”என்றும் அவர் கூறினார்.