Home One Line P1 கிட் சியாங்கிற்கு கொலை மிரட்டல், ஜசெக இளைஞர் பகுதி காவல் துறையில் புகார்!

கிட் சியாங்கிற்கு கொலை மிரட்டல், ஜசெக இளைஞர் பகுதி காவல் துறையில் புகார்!

628
0
SHARE
Ad

ஈப்போ: முகநூல் பதிவொன்றில் ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்த, முகநூல் கணக்கிற்கு எதிராக ஜசெக கட்சியின் இளைஞர் பகுதி தலைவர் ஹொவர்ட் லீ சுவான் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழுவின் தலைவரான லீ, ஹாதா வஹாரி என்ற பயனரால் நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்ட ஒரு பதிவில், ‘லிம் கிட் சியாங் கொல்லப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நான் எப்போதும் அரசியலில் திறந்த கருத்து வேறுபாடுகளை ஏற்பவன். இருப்பினும், இந்த நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகளின் ஒரு பகுதியாக கொலை அச்சுறுத்தல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று நான் நம்புகிறேன்.”

#TamilSchoolmychoice

இப்படி கொலை செய்வதாக அச்சுறுத்துவது கடுமையான குற்றம். நீண்டகாலமாக பணியாற்றும் பொது நபரைக் கொல்லும் அச்சுறுத்தல் நாட்டின் தீவிரத்தன்மைக்கு பங்களிக்கிறது. மேலும், நடவடிக்கை எடுக்காமல் விட முடியாது, ”என்று அவர் ஈப்போ மாவட்ட காவல் தலைமையகத்தில் புகார் அறிக்கையை அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.