கோலாலம்பூர்: மலேசிய காவல் துறையினர் குறித்து மோசமான கருத்துகளைக் கூறியதற்காக “நவீன் பிள்ளை” எனும் டுவிட்டர் கணக்கு உரிமையாளரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கருத்து தாக்குதல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு புகார்கள் நேற்று ஜாலான் துன் ரசாக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டதன் பேரில் அவர் தேடப்பட்டு வருவதாக, புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறையின் முதன்மை உதவி இயக்குநர் (வழக்கு மற்றும் சட்டப் பிரிவு) மியோர் பாரிடாலாத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.
1998-ஆம் ஆண்டுக்கான் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் பிரிவு 233 மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 ஆகியவற்றின் கீழ், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் இன்று செவ்வாய்க்கிழமை தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் ஆகியோரை மோசமான கருத்துகளால் குறிப்பிட்டுள்ளார்.