Home One Line P1 2 சட்டமன்ற உறுப்பினர்களும் இன்னும் மக்கள் பிரதிநிதிகளே!- தேர்தல் ஆணையம்

2 சட்டமன்ற உறுப்பினர்களும் இன்னும் மக்கள் பிரதிநிதிகளே!- தேர்தல் ஆணையம்

779
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் மக்கள் பிரதிநிதிகளாக நீடிக்கிறார்கள் என்று தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார்.

நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அவர்கள், தங்களின் சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இலக்க நேரிடும் என்று அவர் கூறினார்.

அவர் மக்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதற்கான தகுதி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மட்டுமே நீக்கப்படும். ஆனால், குற்றவாளி மற்றும் தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், அவர் மேல்முறையீடு செய்தால், செயல்முறைக்கு வரும் வரையில், மீண்டும் அவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது.” என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட பின்னர், சமீபத்திய பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) கீழ் மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய இரு சட்டமன்ற உறுப்பினர்களை தடுத்து வைத்திருப்பது குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.