புது டில்லி: இந்தியப் பெண்களை உழைக்கும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று பன்னாட்டு நிதியம் (ஐஎம்எப்) அறிவுறுத்தியுள்ளது.
கடந்த செவ்வாயன்று வெளியிடப்பட்ட பொருளாதார அறிக்கையில், இந்தியாவில் மிகவும் திறமையான பெண்கள் உள்ளதாகவும், ஆனால் அவர்கள் வீட்டிலே முடங்கியுள்ளனர் என்றும் பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.
“இந்தியா தற்போது, அதன் வளர்ச்சிக்கான நீண்டகால காரணிகளை கண்டறிந்து செயல்பட வேண்டும். மனித மூலதனத்தில் முதலீடு செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெண்களை உழைக்கும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இது மிகவும் முக்கியமானது. இந்தியாவில் மிகவும் திறமையான பெண்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் வீட்டிலே முடங்கியுள்ளனர்” என்று பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.