Home One Line P1 “ஜாகிர் நாயக் மலேசிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை!”- மொகிதின்

“ஜாகிர் நாயக் மலேசிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை!”- மொகிதின்

1021
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் மலேசிய குடியுரிமைக்கு விண்ணப்பித்ததாக எந்த பதிவும் இல்லை என்று உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.

பாங் ஹோக் லியோங்கின் நாடாளுமன்ற கேள்விக்கு எழுதப்பட்ட பதிலில் அவர் நேற்று திங்கட்கிழமை இவ்வாறு தெரிவித்தார்.

ஜாகீரின் நிரந்தர குடியுரிமை விண்ணப்பம் ஏன் விரைவாக வழங்கப்பட்டது என்றும், இன்னும் தீர்வுக் காணப்படாத, 12,000 பேரின் நீண்டகால விண்ணப்பங்கள் இவ்வாறு செயல்படுத்தப்படுமாஎன்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

ஜாகீரின் குடியுரிமை விண்ணப்பம் விரைவுபடுத்தப்பட்டதா இல்லையா என்ற பிரச்சனையை, மொகிதினின் எழுத்துப்பூர்வ பதில் தீர்க்கத் தவறிவிட்டது. தேசிய பதிவுத் துறையால், வெறுமனே அவரது மைபிஆர் அட்டை வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நிரந்தர குடியுரிமை பெற, விண்ணப்பதாரர் செல்லுபடியாகும் கடப்பிதழை வைத்திருக்க வேண்டும்.  குடிநுழைவு இலாகாவால் வழங்கப்பட்ட உள் நுழைவு அனுமதியும் இருக்க வேண்டும். கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி ஜாகிருக்கு நிரந்தர குடியுரிமையை வெளியிட்டதுஎன்று அவர் பதிலளித்தார்.

ஜாகீரால் மலேசிய குடியுரிமைக்கான விண்ணப்பம் தொடர்பான பிரச்சனையில், தரவுத்தளத்தில் தனிநபரின் குடியுரிமைக்கான விண்ணப்பம் குறித்த பதிவு எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதுஎன்று மொகிதின் குறிப்பிட்டார்.

ஜாகிர் நாயக் தனது சொந்த நாடான இந்தியாவில் பணமோசடி குற்றச்சாட்டில் வேண்டப்பட்டு வருகிறார். இந்தியாவிடமிருந்து கோரிக்கைகள் இருந்தபோதிலும், அங்கு அவருக்கு நியாயமான விசாரணை கிடைக்காது என்று கூறி, ஜாகிரை நாடு கடத்த புத்ராஜெயா மறுத்துவிட்டது.