கோலாலம்பூர்: பாஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நஷாருடின் மாட் இசா இன்று செவ்வாய்க்கிழமை ஷா அலாம் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
3.6 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 30 நம்பிக்கை மீறல் மற்றும் 302,069.60 ரிங்கிட் பண மோசடி வழக்கில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த 2015-ஆண்டிலிருந்து இந்த குற்றங்களை அவர் செய்ததாக நம்பப்படுகிறது. 2011- ஆம் ஆண்டுகான பணமோசடி தடுப்புச் சட்டம், பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டம் கீழ் இந்த பணமோசடி வழக்கு விசாரிக்கப்படுகிறது.
அனைத்து குற்றச்சாட்டுகளும் நீதிபதி ரோசிலா சல்லே முன் வாசிக்கப்பட்டன.
ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை பிற்பகலில் நஷாருடின் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.