Home One Line P1 “ஜம்மு-காஷ்மீருக்கு எதிரான எமது கருத்தினை மீட்டுக் கொள்ளப்போவதில்லை!”- மகாதீர்

“ஜம்மு-காஷ்மீருக்கு எதிரான எமது கருத்தினை மீட்டுக் கொள்ளப்போவதில்லை!”- மகாதீர்

1267
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் செம்பனை எண்ணெயை புறக்கணிப்பதாக இந்திய நாட்டின் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், காஷ்மீர் மற்றும் ஜம்மு பிரச்சனையைக் குறித்த தமது கருத்தினை மீட்டுக் கொள்ளப்போவதில்லை என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

நாங்கள் வெளிப்படையாகப் பேசுகிறோம். பின்வாங்கவோ மாற்றவோ தேவையில்லைஎன்று அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த மாதம் ஐநா பொதுச்சபையில் தாம் காஷ்மீரில் இந்தியா அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளது எனும் தமது கருத்துக்கு மன்னிப்பு கோருவாரா என்று வினவிய போது , அவர் இவ்வாறு கருத்துரைத்தார். பிரதமரின் இந்த அறிக்கை இந்தியாவில் சீற்றத்தைத் தூண்டியது.

#TamilSchoolmychoice

ஜம்முகாஷ்மீர் படையெடுக்கப்பட்டு காலனித்துவப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஒரு காரணம் இருக்கலாம், ஆனால் அது தவறு. இப்பிரச்சனையை சமாதானமாக தீர்க்க வேண்டும். அதைத் தீர்க்க இந்தியா பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். ஐநா தீர்மானத்தை மீறுவது ஐநா மற்றும் சட்டத்தின் ஆட்சியை புறக்கணிப்பதற்கான பிற வடிவங்களுக்கு வழிவகுக்கும்என்று அவர் அப்போது கூறினார்.