Home One Line P1 சபா: யானையின் தந்தங்கள் கண்டெடுப்பு!

சபா: யானையின் தந்தங்கள் கண்டெடுப்பு!

678
0
SHARE
Ad

பெலூரான்: இங்குள்ள செம்பனைத் தோட்டத்தில் ஒரு புதரில் ஜோடியாக யானைத் தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் கிடைத்ததை காவல் துறையினர் இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.

பெலூரான் மாவட்ட காவல் துறைத் தலைவர் காசிம் முடா கூறுகையில், நேற்று புதன்கிழமை மதியம் 1 மணியளவில் பண்ணைத் தொழிலாளர்கள் ஐஓஐ பிம்பிங்கான் 2 பெருந்தோட்ட மேலாளருக்கு தகவல் தெரிவிப்பதற்கு முன்னர் கிராமவாசிகளால் தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர் இது குறித்து காவல் துறையில் அறிக்கையை பதிவு செய்ததாக அவர் கூறினார்.

சமீபத்தில் யானை இறந்து கிடந்த இடத்திற்கு அருகில் தந்தங்கள் காணப்பட்டன,” என்று அவர் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தகவல் கிடைத்ததும், அவரும் தோட்ட மேலாளரும் அந்த இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைக்கு தந்தங்களை எடுத்துச் சென்றதாக காசிம் கூறினார்.

இது வரையிலும், இது சம்பந்தமாக எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், சந்தேக நபர்கள் குறித்து அதிகாரிகள் இன்னும் தகவல்களைத் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பான தகவல்களை பொதுமக்கள் பெலூரான் மாவட்ட காவல் துறை தலைமையகத்தை தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு காசிம் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையில், இப்பகுதியில் யானை இறந்ததற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றும் காசிம் கூறினார்.

சடலத்தின் மீது நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் யானை மீது தோட்டாக்களின் தடயங்கள் எதுவும் இல்லை என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிக்மி யானையின் சடலம் அப்பகுதியில் காணப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.