Home One Line P1 விடுதலைப் புலிகள் விவகாரம் : சொஸ்மா சட்டத்தைப் பயன்படுத்துவது ஏமாற்றமளிக்கிறது – அம்பிகா வருத்தம்

விடுதலைப் புலிகள் விவகாரம் : சொஸ்மா சட்டத்தைப் பயன்படுத்துவது ஏமாற்றமளிக்கிறது – அம்பிகா வருத்தம்

1134
0
SHARE
Ad
அம்பிகா சீனிவாசன் – கோப்புப் படம்

கோலாலம்பூர் – “எந்த சொஸ்மா சட்டத்தை அகற்றுவோம் என்று மக்களிடையே பிரச்சாரம் செய்து நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றதோ, அதே சொஸ்மா சட்டத்தை அகற்றாமல் தனது ஆட்சியிலும் தொடர்ந்து பயன்படுத்துவது மிகவும் ஏமாற்றமளிக்கிறது” என வழக்கறிஞரும், சமூகப் போராளியுமான டத்தோ அம்பிகா சீனிவாசன் கூறினார்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் தலைநகர் சிலாங்கூர் கிளப் வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கள் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அம்பிகா இவ்வாறு தெரிவித்தார்.

“மலேசியா 2.0 தன்மானம் சிதைகிறதா? – Wither Maruah Malaysia 2.0?” என்ற தலைப்பில் பல்வேறு சமூக இயக்கங்களின் தலைவர்கள், கலந்து கொண்ட இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றியதோடு, நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து உரையாற்றிய அம்பிகா சீனிவாசன் இவ்வாறு கூறினார்.

#TamilSchoolmychoice

“நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு ஒன்றரை ஆண்டுகளில் மாற்றமே இல்லை என்று கூற மாட்டேன். நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எனினும், எந்த சொஸ்மா சட்டத்தையும், தேச நிந்தனைச் சட்டத்தையும் அகற்றுவோம் என்று கூறி நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததோ, அதே கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அதே சொஸ்மா சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் சிலரைக் கைது செய்தது ஏமாற்றமளிக்கிறது” என அம்பிகா சாடினார்.

“தீபாவளிக்கு முன்பாக விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி குற்றம் சாட்டுங்கள். அல்லது அவர்களை விடுதலை செய்யுங்கள்” என்றும் அம்பிகா அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

சுமார் 350 பேர் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.