Home One Line P1 பிடிபிடிஎன்: புதிய நடைமுறையைக் கொண்டு வர ஆய்வுக் குழு அமைக்கப்படும்!- கல்வி அமைச்சு

பிடிபிடிஎன்: புதிய நடைமுறையைக் கொண்டு வர ஆய்வுக் குழு அமைக்கப்படும்!- கல்வி அமைச்சு

601
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய உயர் கல்வி நிதிக் கழகத்தை (பிடிபிடிஎன்) மாற்றுவதற்கான புதிய நடைமுறையை மறுஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் அறிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டத்தின் போது, பிடிபிடிஎன் கல்வி நிதி நடைமுறை சிக்கலானது மற்றும் நீடிக்க முடியாதது என்றும் அவர் கூறினார்.

பிடிபிடிஎன் கடந்த டிசம்பர் 2018 முதல் மார்ச் 2019 வரை பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசித்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு மே 16 முதல் ஜூன் 13 வரை நடைபெற்ற மக்கள் ஆலோசனை அறிக்கைகள் மூலம் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.”

#TamilSchoolmychoice

பேச்சுவார்த்தைகளின் முடிவாக, பிடிபிடிஎன் நடைமுறை சிக்கலானது மற்றும் நீடிக்க முடியாதது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே புதிய நடைமுறைக்கு மாற்றுவதற்கான ஒரு குழுவை அமைச்சு அமைக்கும்,” என்று அவர் நேற்றிரவு செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த மஸ்லீ, பெரும்பாலான பிடிபிடிஎன் கடன் பெற்றவர்கள் பி40 பிரிவில் (68 விழுக்காட்டினர்) இருப்பதாகவும், ஒட்டுமொத்தமாக, சுமார் 51 விழுக்காடு கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

அவர்களுக்கு உதவ அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. எனவே கட்டண சிக்கல்களை அடையாளம் காண பிடிபிடிஎன் தற்போது ஆய்வு செய்து வருகிறது. இதனால் அவர்களுக்கு சரியான நடைமுறையுடன் உதவ முடியும்என்று அவர் கூறினார்.