புது டில்லி: நேற்று ஞாயிற்றுக்கிழமை புது டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் காற்று மாசுபாடு மிக மோசமான அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது. இந்திய தலைநகரில் உள்ள அதிகாரிகள் பொது சுகாதார அவசரநிலையை அறிவித்து பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளனர்.
காற்றின் தரம் மோசமடைந்து, மோசமானதாகக் கருதப்படும் 500 அளவை விட 900-க்கும்மேற்பட்டகுறியீட்டை அடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளை விட காற்றின் தரம் மோசமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக அட்டவணையிடப்பட்டும், இரத்தும் செய்யப்பட்டுள்ளன.
இது நகரத்தில் வசிக்கும் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தீங்கு விளைவிக்கிறது. மக்களுக்கு கண் எரிச்சால், தொண்டை புண் வருவதா, சிலர் முன்னெச்சரிக்கையாக முகமூடிகளை பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியில் நச்சு காற்றுக்கு ஆளாக விரும்பாததால் வீட்டிலேயே இருக்க விரும்புகிறார்கள். இதனால், சாலைகள் அமைதியாகக் காணப்படுகிறது.
இந்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு நிறுவனமான சாபார் அடுத்த இரண்டு நாட்களுக்கு காற்றின் தரம் மேம்படாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மழையிலிருந்து வரும் ஈரப்பதம் காற்று மாசுபாட்டை மேலும் மோசமாக்கியுள்ளதாக அது தெரிவித்துள்ளது.