Home கலை உலகம் சஞ்சய் தத் ஏப்ரல் 18-இல் சிறை செல்கிறார்

சஞ்சய் தத் ஏப்ரல் 18-இல் சிறை செல்கிறார்

602
0
SHARE
Ad

sanjayஏப்ரல் 6 – உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்தி நடிகர் சஞ்சய் தத் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய முடிவு செய்துள்ளார்.

கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த வெடிகுண்டு வழக்கில் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 21 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அப்போது சஞ்சய்தத்துக்கு நீதிமன்றத்தில் சரணடைய 4 வாரம் அவகாசம் அளித்தது.

இந்த தீர்ப்பு பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று நடிகர், நடிகைகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் மன்னிப்பு கோரப் போவதில்லை என்றும் உருக்கமுடன் சஞ்சய் தத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தற்போது தான் நடிக்கும் படங்களை முடித்துக்கொடுக்கும் வேலையில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். வரும் 13 ஆம் தேதிக்குள் எல்லா படப்பிடிப்புகளையும் முடித்துவிட்டு அதற்கு மறுநாள் தொடங்கி 17 ஆம் தேதி வரை டப்பிங் பேசுகிறார். 18 ஆம் தேதி சஞ்சய் தத் நீதிமன்றத்தில் சரண் அடைய முடிவு செய்துள்ளார்.