Home One Line P2 நியூசிலாந்து பிரதமரின் சாதனைகளின் பிரதிபலிப்பை மலேசிய அரசியல்வாதிகளும் பின்பற்ற வேண்டும்!- அம்பிகா

நியூசிலாந்து பிரதமரின் சாதனைகளின் பிரதிபலிப்பை மலேசிய அரசியல்வாதிகளும் பின்பற்ற வேண்டும்!- அம்பிகா

971
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நியூசிலாந்து பிரதமர் ஜாசிண்டா அடெர்ன் கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது அரசாங்கத்தின் சாதனைகளை விவரிக்கும் சமீபத்திய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

மலேசிய அரசியல்வாதிகளுக்கும் இது ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் என்று முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் அம்பிகா சீனிவாசன் கேட்டுக் கொண்டார்.

நியூசிலாந்து பிரதமர் அவரது சாதனையின் உச்சத்தில் இருக்கிறார், இந்த காணொளியில் நாம் காணலாம். அவருடைய சான்றுகள், அனைவரையும் உள்ளடக்கும் வழக்கம், இரக்கமுள்ள நெஞ்சம், என்று ஒரு நல்ல முன்மாதிரியாக நிற்கிறார். நிச்சயமாக, அவர் அரசியலில் ஒரு நல்ல முன்மாதிரி என்பதை நீங்கள் காணலாம்.”

#TamilSchoolmychoice

நம் தலைவர்களுக்கு அவர்களின் வலுவான சான்றுகள் உள்ளன, ஆனால் சில சமயங்களில் மற்ற தலைவர்கள் தங்களை எவ்வாறு கொண்டு செல்கிறார்கள் என்பதைப் பார்ப்பது நல்லதாகும். நல்ல எடுத்துக்காட்டுகளுக்காக நாம் எப்போதுமே கடந்த காலத்தை நோக்குகிறோம், ஆனால் சில சமயங்களில் தற்போதைய தலைவர்களை அவர்கள் இன்றைய உலகத்தை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும், ”என்று அம்பிகா மலேசியாகினியிடம் கூறினார்.

தமது நிருவாகத்தின் இரண்டாம் ஆண்டு ஆட்சியை நினைவுகூரும் வகையில் அவரது குழு ஒரு சோதனையாக இதனை வெளியிட்டதாக அடெர்ன் கூறினார்.

இந்த சவாலில் 39 வயதான அடெர்ன் தனது அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்திய கொள்கைகளை பட்டியலிட்டுள்ளார்.

தனது அரசாங்கம் எப்படி 92,000 வேலைகளை உருவாக்கியது, அரை தானியங்கி மற்றும் தாக்குதல் துப்பாக்கிகளை தடை செய்தது, 2,200-க்கும் மேற்பட்ட அரசு வீடுகளை கட்டியது, பூஜ்ஜிய கார்பன் மசோதாவை அறிமுகப்படுத்தியது, 1,600-க்கும் மேற்பட்ட புதிய காவல் துறை அதிகாரிகளை நியமித்தது மற்றும் ஒற்றை நெகிழி பயன்பாட்டை தடைசெய்தது பற்றி அடெர்ன் அக்காணொளியில் பேசினார்.

மேலும், நடப்பட்ட 140 மில்லியன் மரங்கள், பள்ளிகள் திட்டத்தில் இலவச மதிய உணவுகள் மற்றும் காவல் துறையினர், செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை அதிகரித்தது பற்றியும் அவர் பேசியுள்ளார்.

இவ்வாண்டு மார்ச் மாதம் கிறிஸ்ட்சர்ச்சில் இரண்டு மசூதிகளில் நடந்த வெகுஜன துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமது இரக்கம் மற்றும் அக்கறையை வெளிப்படுத்தியப் பிறகு அவர் உலகமறியும் பிரதமாரானார்.

அம்பிகா சுட்டிக் காட்டிய அக்காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது:

To mark two years in Government, I was issued a wee challenge…

Posted by Jacinda Ardern on Friday, November 1, 2019