Home அரசியல் தும்போக் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு சேவியர் ஜெயகுமார் தீர்வு கண்டார்.

தும்போக் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு சேவியர் ஜெயகுமார் தீர்வு கண்டார்.

592
0
SHARE
Ad

Tumbok-Est-Workers-with-Xavier

ஏப்ரல் 6 – ம.இ.கா வின் முதலீட்டு கரமான  மைக்கா ஹோல்டிங்சுக்கு சொந்தமான தும்போ தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டி கொடுக்க ஒப்பந்தத்தை  கையெழுத்திட்டு  அவர்களின்  சேவைக்கால ஊதியத்தையும் பிடித்தம் செய்து கடைசி வரையில் வீடுகளைக் கட்டி கொடுக்காமல் இழுத்தடித்து ஏமாற்றப்பட்ட  தொழிலாளர்களின் பிரச்சனைக்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் தலைமையிலான பணிக்குழு தீர்வு கண்டுள்ளது.

“இந்தியர்கள் ஒவ்வொருவரின் உரிமைக்கும் போராடி அவர்களின் தேவையை நிறைவு செய்ய நமக்கு ஆசை என்றாலும், நாங்களும் சட்ட விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும். ஆனால் சில அரசியல் கட்சிகளுக்கு அது பற்றி அக்கறையில்லை. சொந்தத் தோட்டத்தில் பாதிக்கப் பட்டவர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களை மதிக்காதவர்கள் அவர்கள்” என இந்த பணிக்குழுவில் சம்பந்தப்பட்டவர்கள் கூறினர்.

#TamilSchoolmychoice

ஆரம்பத்தில் மைக்காவின் தும்போ தோட்டத்தில் வீட்டுமனைக்கு ஒப்பந்தம் செய்தவர்கள் 32 தொழிலாளர் குடும்பங்கள் என்றாலும் 17 குடும்பங்கள் மைக்கா நிறுவனத்தை எடுத்துக் கொண்ட ஜிடீம்  நிறுவனம் வழங்க முன் வந்த 25,000 ஆயிரம் வெள்ளியுடனான மாற்று திட்டத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

எஞ்சி இருந்த 12 குடும்பங்களில் 8 தொழிலாளர்களை மட்டுமே  ஜிடீம்  நிறுவனம் தும்போக் தோட்டத் தொழிலாளர்களாக அங்கீகரித்து வந்தது. அவர்களில் மீதமுள்ள நான்கு குடும்பங்களை ஓய்வு பெற்ற தொழிலாளர்களாகக் கருதியது. மேலும், ..காவுக்கு சொந்தமான மைக்கா நிறுவனம் தொழிலாளர்களுக்காக வரைந்த ஒப்பந்தம் மிகப் பலவீனமான ஒன்றாக இருந்ததால், தொழிலாளர்கள் சட்டப்படியாக அவர்களின் ஒப்பந்தத்தை எளிதில்  நிறைவேற்ற முடியவில்லை.

இருப்பினும் நீண்ட போராட்டத்துக்குப் பின் 8 தொழிலாளர்கள் இப்போதிருக்கும் வீடுகளை மாநில அரசு செலவில் மேம்படுத்தித் தனி வீட்டு மனை வழங்கவும், ஜிடீம் நிறுவனம் எல்லா 12 தொழிலாளர்களுக்கும் வீட்டுமனைக்கு நிலம் ஒதுக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதற்கான நிலப் பிரிமியமாக  வெறும் ஆயிரம் ரிங்கிட் மட்டுமே செலுத்தி 2700 சதுர அடி நிலத்தை இதன் மூலம் வீட்டு மனைகளாகத் தொழிலாளர்கள் பெறுவர்.

“2008ஆம் ஆண்டு நிகழ்ந்த அரசியல் மாற்றத்தால் அமைந்தது இந்தப் பக்காத்தான் சிலாங்கூர் மாநில அரசு. அதன் நேர்மையான போராட்டத்தின் வழி, தும்போக் தோட்ட இந்தியத் தொழிலாளர்களைப் பெரிய ஏமாற்றத்திலிருந்து காப்பாற்றியுள்ளது. இருப்பினும் ஏமாற்றப்பட்ட மற்றத் தொழிலாளர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது” என்றும் இந்த பணிக்குழுவில் சம்பந்தப்பட்டவர்கள் கூறினர்..

சம்பந்தப்பட்டவர்கள் செய்த தவறுகளால், முழு பயனை அடைய வேண்டிய 32 குடும்பங்களில் வெறும் 12 குடும்பங்களுக்கே சிலாங்கூர் அரசால் உதவ முடிந்தது. அவர்களின் ஒவ்வொரு வீட்டு மனையும் குறைந்தது 50 ஆயிரம் வெள்ளி மதிப்புடையது.

“இப்படிப் பல வழிகளில் நாடு முழுவதிலும் கடந்த 55 ஆண்டுகளாக ஏழைகளின் வாய்ப்புகளை அபகரித்து வந்தவர்களை நம்பி இன்னும் எத்தனை ஆண்டுக்கு நம்மவர்கள் ஏமாற வேண்டும்? இப்படி வாய்ப்புகளைத் தொடர்ந்து இழந்து வந்தால் சமுதாயம் எப்படிப் பொருளாதாரத்தில் மீட்சியடையும்?” என்ற கேள்விகளும் இந்தப் பிரச்சனையினால் எழுந்துள்ளன. .

“கடந்த வாரம் தொழிலாளர்களுக்கு  வீட்டு மனைக்கான கூட்டத்தில், சேவைக்கால ஊதியமாக 25 ஆயிரம் வெள்ளி  வழங்கப்பட்டது. இது போன்று கிடைக்கும் பணத்தை மிகக் கவனமாக ஆக்ககரமான  காரியங்களுக்குச் செலவிடவேண்டும். அதே வேளையில், தமிழ்ப்பள்ளி மற்றும்  ஆலயத்துடன்  இக்குடியிருப்பு அமைந்துள்ளதால் அதனைச் சிறு  கம்பமாக மேம்படுத்தி வாழ, மாநில அரசு மேலும்  உதவி புரியும்” என்று சேவியர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

“நம்மவர்களை வைத்தே நம் இனத்தைச் சுரண்டும் கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டி இந்தியர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டியது எனது கடமை” என்றும் டாக்டர் சேவியர். ஜெயகுமார் கூறினார்.

“ஓர் அரசியல் கட்சியான கா –  அது அமைத்த பொருளாதார அமைப்பின் கீழ் உள்ள  தோட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு சட்ட ரீதியில் கிடைக்க வேண்டியதை மறுப்பதற்கு  இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது. இதற்கெல்லாம்  தக்க பதில்  அளித்தேயாக வேண்டும்” என்றார்  சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

படவிளக்கம் – தும்போக் தோட்டத் தொழிலாளர்களுடன் டாக்டர் சேவியர் ஜெயகுமார்