Home 13வது பொதுத் தேர்தல் கனி ஒத்மான் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் கடுமையாக போட்டியாக அமையும் – லிம் கிட் சியாங்

கனி ஒத்மான் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் கடுமையாக போட்டியாக அமையும் – லிம் கிட் சியாங்

529
0
SHARE
Ad

Lim Kit Siangகோலாலம்பூர்,ஏப்.6- கேலாங் பாத்தா தொகுதியில் ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ அப்துல் கனி ஒத்மான்  போட்டியிட்டால் மிக கடுமையான போட்டியாக அமையும் என்று லிம் கிட் சியாங் ஒப்புக் கொண்டுள்ளார்.

தன்னுடைய 47 வருட கால அரசியல் வாழ்க்கையில் மிகவும் கடுமையான போட்டியாக இதைக் கருதுவதாக அவர் கூறினார்.

ஈப்போ தீமோர் தொகுதியில் 20,000 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும்,  ஏற்கனவே தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ள இந்த தொகுதியை கைப்பற்றுவது மிகவும் கடினம் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் சென்ற வாரத்தில் லிம் கிட் சியாங் கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிடுவது மிகவும் ஆபத்து என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில் அன்வார் இப்ராகிம் மீண்டும் பெர்மாத்தாங் பாவ் தொகுதியிலேயே போட்டியிடுவது குறித்து கருத்துரைத்த லிம் கிட் சியாங் அதற்கு சில வியூகக் காரணங்கள் இருக்கின்றன எனத் தெரிவித்தார்.

அன்வார், பேராக் தம்பூன் தொகுதியில் போட்டியிட்டால் அவரால் வேறு எங்கும் செல்ல முடியாது என்றும் மக்கள் கூட்டணிக்கு உதவ மற்ற தொகுதிகளுக்கு பிரச்சாரங்களுக்கு செல்லமுடியாது என்றும் லிம்  கூறினார்.

கேலாங் பாத்தா தொகுதியில் தான் போட்டியிடுவதால் அதிகமான நேரத்தை தான் தொகுதியிலேயே செலவிட வேண்டியிருக்கும் என்பதாலும்  தன்னாலும் மற்ற தொகுதிகளுக்கு பிரச்சாரத்திற்கு செல்ல முடியாது என்பதாலும் அன்வாரை அவர் சுலபமாக வெல்லக் கூடிய பெர்மாத்தாங் பாவ் தொகுதியிலேயே  அவரை நிறுத்த மக்கள் கூட்டணி முடிவு செய்ததாகவும் லிம் கூறினார்.