Home அரசியல் மக்கள் கூட்டணி ஆட்சி அமைத்தால் லங்காவி லீமா குத்தகைகள் மறுபரீசிலினை செய்வோம் – முகமட் சாபு

மக்கள் கூட்டணி ஆட்சி அமைத்தால் லங்காவி லீமா குத்தகைகள் மறுபரீசிலினை செய்வோம் – முகமட் சாபு

575
0
SHARE
Ad

Mohd-Sabu-Sliderஜோகூர்பாரு, ஏப்.6-  மக்கள் கூட்டணி வரும் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் தேசிய முன்னணி அரசாங்கம் அண்மையில் செய்து கொண்டுள்ள லங்காவி அனைத்துலக வான் – கடல் கண்காட்சி ஒப்பந்தம் (லீமா) குறித்து மறு பரீசிலினை செய்வோம் என்று பாஸ் கட்சியின் துணைத்தலைவர்  முகமட் சாபு தெரிவித்துள்ளார்.

கண்காட்சி முடிந்த பின் தான் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் நாடாளுமன்றத்தை  கலைத்துள்ளார் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பாதுகாப்புக்காக 4.2 பில்லியன் ரிங்கிட்டில் ஆயுதங்களும், விமானங்களும் வாங்க அரசாங்கம் உடன் படிக்கை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி அரசாங்கம் மக்கள் பணத்தை சுரண்டி வருவதாகவும், வரும் பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி ஆட்சி அமைத்தால் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகளை  மறுபரீசிலினை செய்வோம் என்றும் பண்டார் பாரு ஊடா என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் ஆர்.டி.எம்.மில் எதிர்கட்சியினருக்கு 10 நிமிடங்கள் நேரம் வழங்கியிருப்பது போதாது என்றும், 10 நிமிடத்தில் ஊடகங்களின் வழி மக்களுக்கு  செய்தி வழங்க முடியாது என்றும் அவர் கூறினார்.

ஊடக சுதந்திரம் இங்கு இல்லை என்றும்,  ஊடகங்ளின் சுதந்திரம் குறித்து அனைத்துலக  ஆய்வின் படி 147 நாடுகளில் மலேசியா 145 இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாஸ் கட்சியின் உதவித்தலைவர் சலாவுடின் அயூப் கூறுகையில் மே 11ஆம் தேதி தேர்தல் நடத்தப்படலாம் என்றும், மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 1969ஆம் ஆண்டு மே மாதம் போல் கலவரம் ஏற்படும் என்று மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் கருத்துரைத்தார்