Home One Line P2 பேங்காக்: தெற்கில் உள்ள பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இருக்க பிராயுத் வேண்டுகோள்!

பேங்காக்: தெற்கில் உள்ள பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இருக்க பிராயுத் வேண்டுகோள்!

720
0
SHARE
Ad

பேங்காக்: கடந்த செவ்வாயன்று 15 பேரின் உயிரைக் கொன்ற தீவிரவாத நடவடிக்கைக்குப் பிறகு, நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள யாலா மாகாணத்தில் பாதுகாப்பை அதிகரிக்கவும், பணயக்கைதிகளை வேட்டையாடவும் தாய்லாந்தின் பிரதமர் பிராயுத் சான் ஓசா நேற்று புதன்கிழமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பாதுகாப்பு அமைச்சருமான பிராயுத் இத்தாக்குதலைக் கண்டித்ததுடன், தெற்கு தாய்லாந்தில் நடைபெற்று வரும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை வலியுறுத்தும் முயற்சியாக தாக்குதல் நடத்தியவர்கள் சோதனைச் சாவடிகளை தங்கள் இலக்காகக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இதுதொடர்பாக, நாட்டின் தெற்கில் உள்ள பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பை மேம்படுத்தவும், எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்துபவர்களின் இலக்காக இருக்கக்கூடும் என்பதால் விழிப்புடன் இருக்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.

#TamilSchoolmychoice

தாக்குதல் நடத்தியவர்கள் சமாதான பேச்சுவார்த்தைகளில் தங்களுக்கு அழுத்தம் கொடுக்க எளிதான இலக்குகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். காவல் துறையினர் அவர்களுக்காக வேட்டையாடுகிறார்கள். அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவார்கள்” என்று ஓர் ஊடக மாநாட்டில் பிராயுத் கூறினார்.

பலியானவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பிராயுத் தம் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணியளவில் (மலேசியா நேரம் இரவு 11.15 மணியளவில்), ஆயுதமேந்திய குழு ஒன்று கம்போங் துங் சாடோ மற்றும் லம்பாயாவில் உள்ள கம்போங் தங்லும் ஆகிய இடங்களில் பாதுகாப்பு வீரர்களைத் தாக்கியது. இதில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.