Home கலை உலகம் ஸ்டார் விஜய் சூப்பர் சிங்கர் 7 – வெல்லப் போவது யார்?

ஸ்டார் விஜய் சூப்பர் சிங்கர் 7 – வெல்லப் போவது யார்?

1042
0
SHARE
Ad

கோயம்புத்தூர் – (மலேசிய நேரம் இரவு 10.30) இங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணி (இந்திய நேரம்) தொடங்கி நடைபெற்று வரும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் 7 போட்டியின் முடிவில் வெல்லப் போவது யார் என்ற ஆர்வமும் பரபரப்பும் உலகம் எங்கும் ஏற்பட்டுள்ளது.

இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கும் 5 பாடகர்கள் பின்வருமாறு:

  1.  விக்ரம்
  2. புண்ணியா
  3. முருகன்
  4. கௌதம்
  5. சாம் விஷால்
விக்ரம்-புண்ணியா-முருகன்-சாம் விஷால்-கௌதம்

இவர்களில் சிறந்த பாடகர்களை நீதிபதிகளும், இரசிகர்கள் இணையம் வழியாகவும் தேர்வு செய்கின்றனர்.

#TamilSchoolmychoice

முதல் சுற்று முடிந்து தற்போது இரண்டாவது சுற்றில் போட்டியாளர்கள் பாடி வருகின்றனர்.

பிரபல இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மலேசியரான முகேன் ராவும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்டிருக்கிறார்.