Home One Line P1 சிங்கப்பூருக்கு வழங்கப்படும் நீரின் விலையை திருத்த மலேசியாவிற்கு உரிமை உண்டு!- சேவியர்

சிங்கப்பூருக்கு வழங்கப்படும் நீரின் விலையை திருத்த மலேசியாவிற்கு உரிமை உண்டு!- சேவியர்

1046
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1987 முதல் 2012 வரை சிங்கப்பூருக்கு வழங்கப்பட்ட நீரின் விலையை திருத்துவதற்கு மலேசியாவுக்கு உரிமைகள் இருந்தும், அவ்வாறு செய்யத் தவறியதால், தற்போது நீரின் விலையை திருத்துவதற்கான உரிமையை மலேசியா இழந்துவிட்டதாக சிங்கப்பூர் கூறினாலும், அதனை செய்வதற்கான உரிமை இன்னும் உண்டு என்று நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மக்களவையில் தெரிவித்தார்.  

1962-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் 14-வது பிரிவின் கீழ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பிறகும் ஒவ்வொரு ஆண்டும் நீர் விலை சோதனைகள் செய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் தொடர்பாக சிங்கப்பூருடன் சந்திப்புகளையும் கலந்துரையாடல்களையும் நடத்தத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

எனவே இந்த விவகாரம் பற்றி விவாதிக்க மலேசிய அரசாங்கத்தின் திட்டத்தை சிங்கப்பூர் ஏற்றுக்கொள்ள முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். 1,000 கேலன் தண்ணீருக்கு மூன்று காசுகள் என்பது நியாயமற்றது.  பிற நாடுகளில் மூல நீர் விற்பனை விகிதத்துடன் ஒப்பிடும்போது இது மிகவும் மலிவானது, ”என்று அவர் குறிப்பிட்டார்.

ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மலேசியாவின் கடமைகளை அமைச்சு மதித்தாலும், ஜோகூர் மக்களின் நலன்களை ஆபத்தில் ஆழ்த்தி மற்றவர்களின் நலனுக்காக நீர் வளங்களை மலேசியா தியாகம் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஜோகூர் ஆற்றில் இருந்து ஒரு நாளைக்கு 250 மில்லியன் கேலன் மூல நீரை சிங்கப்பூர் அணுகுவதை உறுதிசெய்ய பல செலவுகள் செய்ய வேண்டியிருந்தது. அதே நேரத்தில் ஆற்றில் உப்பு நீர் ஊடுருவுவதைத் தடுக்க ஜோகூர் நதி தடையை உருவாக்க அமைச்சகம் கிட்டத்தட்ட 100 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டுள்ளதாக அவர் விளக்கினார்.