கோலாலம்பூர்: டாக்டர் மகாதிர் முகமட் தொடர்பான சமீபத்திய வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கு பிரதமரின் மூத்த மகள் மரினா, ஶ்ரீ பெர்டானா குடும்பத்தினரின் அனுமதியும் ஆசிர்வாதமும் அப்படத்திற்கு இல்லை என்று கூறியுள்ளார்.
டாக்டர் மகாதீரின் கதையை யாரும் சொல்வதை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை, ஏனெனில் அது தங்களை சங்கடப்படுத்தும் என்று அவர் உணர்ந்தியுள்ளார்.
“திரைப்படம், இசை நிகழ்ச்சிகள், கார்ட்டூன்கள் அல்லது எங்களைப் பற்றி வேறு எதையும் தயாரிக்க என் குடும்பம் விரும்புவதில்லை, ஏனெனில் இது சங்கடமாக இருக்கிறது,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், அவ்வாறு எடுக்கப்பட்டால் தங்களை அவற்றைப் பார்க்காத படி இருக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பேராசிரியர் டாக்டர் முகமட் ஹத்தா அசாட் கான் இயக்க இருக்கும் மகாதீர்: டி ஜர்னி திரைப்படத்தைப் பற்றி மரினா குறிப்பிட்டுக் கூறினார்.
ரிலையன்ஸ் மீடியா குழுமம் தயாரிக்கும் இத்திரைப்படம் டாக்டர் மகாதீரின் 16 ஆண்டுகால போராட்டத்தை உள்ளடக்கியுள்ளது.
2018-ஆம் ஆண்டில் அவர் மீண்டும் ஆட்சிக்கு வரும் வரை நாட்டின் முதன்மை தலைவராக 22 ஆண்டுகள் அவர் பணியாற்றியதை மையமாகக் கொண்டுள்ளது.
இதற்கிடையில், தனது குடும்பத்தைப் பற்றி ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட தரப்பினர் அவர்களின் அனுமதியைக் கேட்டார்களா என்று வினவிய போது, மரினா இல்லை என்று பதிலளித்துள்ளார்.