Home One Line P1 தள்ளுபடிக்கு பிறகு மலேசிய செம்பனை எண்ணெயை மீண்டும் வாங்கும் இந்தியா!

தள்ளுபடிக்கு பிறகு மலேசிய செம்பனை எண்ணெயை மீண்டும் வாங்கும் இந்தியா!

1111
0
SHARE
Ad

புது டில்லி: இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் மலேசிய செம்பனை எண்ணெயை வாங்க தொடங்கியுள்ளன

வரும் டிசம்பர் மாதத்தில், கோலாலம்பூர், டன் ஒன்றுக்கு 5 டாலர் தள்ளுபடியை வழங்குவதால், அம்மாதத்தில்  70,000 டன் ஏற்றுமதிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று இன்று வியாழக்கிழமை ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளதாக டி ஸ்டார் குறிப்பிட்டுள்ளது.

செம்பனை எண்ணெயை வாங்குவதை இந்தியா மீண்டும் தொடர்வதால், மலேசிய செம்பனை விலையை ஆதரிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

காஷ்மீரில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கோலாலம்பூர் விமர்சித்ததை அடுத்து, புது டில்லி இறக்குமதி வரிகளை உயர்த்தலாம் அல்லது இறக்குமதியைக் கட்டுப்படுத்த மற்ற நடவடிக்கைகளை அமல்படுத்தக்கூடும் என்ற அச்சத்தில் இந்திய சுத்திகரிப்பாளர்கள் கடந்த மாதம் மலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெயை வாங்குவதை நிறுத்தினர்.

இந்தோனிசிய துறைமுகங்களில் நெரிசலுக்கு மத்தியில் மலேசிய செம்பனை எண்ணெய் 5 டாலர் தள்ளுபடியில் கிடைக்கிறது என்று மும்பையைச் சேர்ந்த வணிக நிறுவனம் தெரிவித்தது.