Home One Line P1 “மகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது!”- சாஹிட் ஹமீடி

“மகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது!”- சாஹிட் ஹமீடி

1402
0
SHARE
Ad

தஞ்சோங் பியாய்: நேற்று சனிக்கிழமை நடந்து முடிந்த தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில், எதிர்பாராத தோல்வியை நம்பிக்கைக் கூட்டணி அடைந்த நிலையில், எதிர்பாராத அபார வெற்றியை தேசிய முன்னணி வேட்பாளர் வீ ஜெக் செங் பதிவு செய்துள்ளார்.

சுமார் 15,086 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் மீண்டும் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதியைக் கைப்பற்றியுள்ளார். இதற்கிடையில் இது குறித்து கருத்துரைத்த, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி, சீனர்கள் மீண்டும் தேசிய முன்னணி பக்கம் வந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சீனர்கள் தேசிய முன்னணி பக்கம் வந்ததன் அடையாளமாக இதனை ஏற்கிறோம். கூட்டணியில் இருக்கும் கூட்டுக் கட்சிகளுக்கு இது ஒரு வெற்றி சமிக்ஞை. தேசிய முன்னணி இன்னும் மக்கள் மனதில் நிலைத்துள்ளது.என்று நேற்றிரவு செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மேலும், பாஸ் மற்றும் அம்னோ இடையிலாக தேசிய ஒருங்கிணைப்பு எதிர்க்கட்சியை மேலும் வலுப்பெற செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரதமர் மகாதீர் இதன் தொடர்பில் பதவி விலக வேண்டுமா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு, சாஹிட் எந்தவொரு கருத்தும் தெரிவிக்காது, அவ்விவகாரத்தில் தாம் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

நான் அவ்விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. மக்கள் அதை விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது” என்று அவர் தெரிவித்தார்.

ஜாலான் ரிம்பா தெர்ஜுன் மற்றும் கம்போங் டுசுன் ஆகிய இரு வாக்கு மையங்களின் வாக்குகள் பெரும்பாலும் தேசிய முன்னணிக்கு சென்றுள்ளதாக மலேசியாகினி தெரிவித்திருந்தது. இவ்விரு வாக்கு மையங்களிலும் சீன வாக்காளர்கள் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தேர்தல் முடிவில், தேசிய முன்னணி வேட்பாளரான வீ ஜெக் செங் 25,466 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார். நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரான கர்மெய்ன் சர்டினி 10,380 வாக்குகளைப் பெற்ற நிலையில், கெராக்கான் வேட்பாளர் வேண்டி சுப்ரமணியம் 1,707 பெற்றார்.

பெர்சாஜா வேட்பாளர் டத்தோ டாக்டர் பாட்ருலஷாம் அப்துல் அசிஸ் 850 வாக்குகளைப் பெற்றார். இதர இரு சுயேச்சை வேட்பாளர்களான டாக்டர் அங் சுவான் லாக் மற்றும் பாரிடா ஆரியணி அப்துல் காபார் தலா 380 மற்றும் 32 வாக்குகளைப் பெற்றனர்.