Home One Line P1 தஞ்சோங் பியாய்: தேமு அதிக பெரும்பான்மையில் அபார வெற்றி!

தஞ்சோங் பியாய்: தேமு அதிக பெரும்பான்மையில் அபார வெற்றி!

1098
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

தஞ்சோங் பியாய்: தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு முடிந்த வேளையில், தேசிய முன்னணி வேட்பாளரான வீ ஜெக் செங் 25,466 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரான கர்மெய்ன் சர்டினி 10,380 வாக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 15,086 வாக்குகள் பெரும்பான்மையில் வீ ஜெக் செங் அபார வெற்றிப் பெற்றுள்ளார்.

இதற்கிடையில், கெராக்கான் வேட்பாளர் வேண்டி சுப்ரமணியம் 1,707 பெற்றுள்ளார். பெர்சாஜா வேட்பாளர் டத்தோடாக்டர்பாட்ருலஷாம்அப்துல்அசிஸ் 850 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் , இதர இரு சுயேச்சை வேட்பாளர்களான டாக்டர் அங் சுவான் லாக் மற்றும் பாரிடா ஆரியணி அப்துல் காபார் தலா 380 மற்றும் 32 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

#TamilSchoolmychoice

தேர்தல் முடிவினை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நடந்து முடிந்த இடைத் தேர்தல்களில் தேசிய முன்னணி தொடர்ந்து நான்காவது வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் சுமார் 74.5 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார். ரந்தாவ் சட்டமன்ற இடத்தேர்தலுக்குப் பிறகு அதிகமான வாக்குப்பதிவுப் பெற்ற தொகுதியாக தஞ்சோங் பியாய் திகழ்கிறது.

சீனர்களின் வாக்குகளை தேசிய முன்னணி மீண்டும் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. சீனர்களின் பெருமான்மையான வாக்குகள் மீண்டும் தேசிய முன்னணி பக்கம் திரும்பியுள்ளது.

இன்று மாலை 5.30 மணியுடன் நிறைவு பெற்ற தஞ்சோங் பியாய் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில்தேசிய முன்னணி வேட்பாளர் வீ ஜெக் செங் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் கர்மெய்ன் சர்டினியை விட கூடுதல் வாக்குகளைப் பெற்று முன்னனியில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.