கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெற்று முடிந்த நிலையில், இதன் முடிவுகள் வரும் திங்கட்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
15 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் 35 வேட்பாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். ஆயினும், அனைத்து கண்களும் ஆளும் சஜித் பிரேமதாசா மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தாபயா ராஜபக்சே மீது உள்ளன.
இதற்கிடையில், காலையில், சிறுபான்மை முஸ்லிம் வாக்காளர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வடமேற்கு இலங்கையின் அனுராதபுரத்தில் துப்பாக்கிதாரிகளால் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
புட்டலத்தில் இருந்து மன்னார் வரை பயணித்த வாக்காளர்கள் காயமின்றி தப்பியதாகவும், சில பேருந்துகள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
வரலாற்று ரீதியாக, 2015 தேர்தலில் 81.5 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.