Home One Line P1 அஸ்மினின் இளைஞர் அணி காங்கிரஸ் அழைப்பு மீட்டுக் கொள்ளப்பட்டதற்கு, சூழ்ச்சி இருப்பதை அன்வார் மறுப்பு!

அஸ்மினின் இளைஞர் அணி காங்கிரஸ் அழைப்பு மீட்டுக் கொள்ளப்பட்டதற்கு, சூழ்ச்சி இருப்பதை அன்வார் மறுப்பு!

882
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் இளைஞர் அணியின் காங்கிரஸை அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பதற்கான அழைப்பு மீட்டுக் கொள்ளப்பட்டது தொடர்பில் தனிப்பட்ட நபரின் சூழ்ச்சி இருப்பதாக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளதை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மறுத்துள்ளார்.

ஒருவேளை அவர் வானத்திலிருந்து கீழே பார்க்கிறார் போலும்.” என்று அன்வார் கூறினார்.

அரசியல் பணியகக் கூட்டங்கள் மாதத்திற்கு அல்லது வாரத்திற்கு இரண்டு முறை நடக்கிறது, ஒவ்வொரு மாதமும் மத்திய தலைமைக் குழு கூட்டமும் நடக்கிறது, எதுவாக இருந்தாலும், எல்லோரும் கருத்து தெரிவிக்கலாம், எதிர்ப்பு தெரிவிக்கலாம், நிராகரிக்கலாம்.”

#TamilSchoolmychoice

எந்தவொரு மாற்றமும் எந்தவொரு நபரின் அச்சுறுத்தல்களால் அல்ல. ஆனால், கூட்டத்தால் செய்யப்பட வேண்டும்என்று அவர் நேற்று வெள்ளிக்கிழமை  செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக, தம்மை இளைஞர் அணி காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளாது இருப்பதற்காக கண்ணுக்குத் தெரியாத தனிப்பட்ட நபரின் சூழ்ச்சி இருப்பதாக அஸ்மின் கூறியிருந்தார்.