Home One Line P1 அகால்புடி அறக்கட்டளையின் 31 மில்லியன் பணத்திலிருந்து ஒரு விழுக்காடு கூட ஏழைகளுக்கு வழங்கப்படவில்லை!

அகால்புடி அறக்கட்டளையின் 31 மில்லியன் பணத்திலிருந்து ஒரு விழுக்காடு கூட ஏழைகளுக்கு வழங்கப்படவில்லை!

664
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவுவதற்காக அமைக்கப்பட்ட அகால்புடி அறக்கட்டளைக்கு சொந்தமான 31 மில்லியன் ரிங்கிட் நிதியில் இருந்து ஒரு விடுக்காடு கூட அவர்களுக்காக செலவழிக்கப்படவில்லை என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடங்கிய  அகால்புடி அறக்கட்டளையின் மில்லியன் கணக்கான ரிங்கிட் நிதி சம்பந்தப்பட்ட அகமட் சாஹிட் ஹமீடி விசாரணையின் போது துணை அரசு வழக்கறிஞர் ரோசெலா ராஜா டோரான் தனது தொடக்க உரையில் இந்த குற்றச்சாட்டை வெளிப்படுத்தினார்.

அகமட் சாஹிட் 47 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். அவற்றில் 12 நம்பிக்கை மீறல், எட்டு ஊழல் மற்றும் அறக்கட்டளையின் நிதி சம்பந்தப்பட்ட 27 எண்ணிக்கையிலான பண மோசடி குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும்.

#TamilSchoolmychoice

இந்த வழக்கு விசாரணை நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்குவேரா முன் வாசிக்கப்பட்டது. மேலும் அகமட் சாஹிட்டை பிரதிநிதித்து வழக்கறிஞர் ஹிஷாம் தெஹ் போ டீக் வாதாட இருக்கிறார்.

ஏழைகளுக்கும், தேவைப்படுவோருக்கும் உதவுவதற்காக அகால்புடி அறக்கட்டளை அமைக்கப்பட்டதாகவும், அவ்வறக்கட்டளையின் சுமார் 31 மில்லியன் ரிங்கிட் நிதியை அகமட் சாஹிட் மோசடி செய்துள்ளார் என்பதை நிரூபிக்க முயற்சிப்பதன் மூலம் வழக்கு விசாரணையைத் தொடங்குவதாக ரோசெலா கூறினார்

அந்நிதியானது தனிநபர் கடன் பற்று அட்டை கட்டணங்களை செலுத்துவது, மோட்டார் வாகன காப்பீட்டை செலுத்துவது, மற்றும் தனியாருக்குச் சொந்தமான வாகனங்களுக்கு சாலை வரி வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படுகிறதுஎன்று அவர் கூறினார்.

உள்துறை அமைச்சராக இருந்தபோது 17 மில்லியனை கையூட்டாகப் பெற்றக் குற்றச்சாட்டில் அகம்ட சாஹிட் மீது வழக்கு தொடரப்படும் என்றும் ரோசெலா கூறினார்.

உள்துறை அமைச்சின் அதிகார எல்லைக்குள் உள்ள மைஇஜி திட்டத்தை வழங்கியதற்காக குற்றம் சாட்டப்பட்டவர், ஒருவரிடமிருந்து 4.25 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

மேலும், அகமட் சாஹிட் பல தரப்பினரிடமிருந்து 65 மில்லியன் ரிங்கிட் காலோசையை ஒரு வழக்கறிஞர் மூலம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பின்னர், அப்பணங்கள் குற்றம்சாட்டப்பட்டவரின்கணக்கில்செலுத்தப்பட்டதாக ரோசெலா கூறினார்.

பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் அப்பணத்தை பயன்படுத்தி 5.9 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இரண்டு ஆடம்பர சொகுசு வீடுகளை வாங்கியதாகக் கூறினார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 19, டிசம்பர் 14 மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரி 20 ஆகிய தேதிகளில் இக்குற்றச்சாட்டுகள் சாஹிட் மீது சுமத்தப்பட்டன.

தண்டனைச் சட்டம் பிரிவு 409, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சட்டம் 2019, மற்றும் தடுப்புச் சட்டத்தின் பிரிவு பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து கிடைக்கும் வருமானம் 2001 (அம்லாட்பாபுவா) ஆகிய சட்டங்களின் கீழ் அகமட் சாஹிட் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.