Home One Line P2 டெஸ்லா சைபர்டிரக் மின்சாரக் கார் – 200,000 கார்கள் முன்பதிவு

டெஸ்லா சைபர்டிரக் மின்சாரக் கார் – 200,000 கார்கள் முன்பதிவு

849
0
SHARE
Ad

பாலோ அல்டோ (கலிபோர்னியா) – சில நாட்களுக்கு முன்னர் சைபர்டிரக் (Cybertruck pickup) என்ற புதிய இரக வாகனத்தை அமெரிக்காவின் முன்னணி மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், என்ற உறுதியான இரும்புத் தகட்டினால் தயாரிக்கப்பட்ட இந்தக் கார் மிகவும் உறுதியானது, பாதுகாப்பானது என்ற விளம்பரங்களோடு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த வாகனத்தின் கண்ணாடி உடைக்க முடியாதது என்ற விளம்பரத்தோடு அறிமுக நிகழ்ச்சியன்று மேடைக்குக் கொண்டு வரப்பட்டது சைபர்டிரக் கார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் மேடையில் இருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு இரும்புத் துண்டை எடுத்து காரின் கண்ணாடியை நோக்கி எறிய, அந்தக் காரின் கண்ணாடி நொறுங்கி பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனைத் தொடர்ந்து அந்தக் காருக்கு அவ்வளவாக வரவேற்பு இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓரிரு நாட்களிலேயே 200,000 கார்களுக்கான முன்பதிவுகள் பொதுமக்களிடம் இருந்து டெஸ்லாவுக்குக் கிடைத்திருப்பது ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

எதிர்வரும் 2021-ஆம் ஆண்டில்தான் சைபர்டிரக் கார் தயாரிப்புக்கு வரும். எனினும், 100 டாலர் செலுத்தி காரை முன்பதிவு செய்யலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் முன்பதிவுகளைச் சமர்ப்பித்திருக்கின்றனர்.

ஏராளமான முன்பதிவுகள் கிடைக்கப் பெற்றிருப்பதைத் தொடர்ந்து, டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் சுமார் 4 விழுக்காடு உயர்வு கண்டன.