Home One Line P1 சின் பெங்கின் சாம்பல் மலேசியாவிற்குள் கொண்டு வர எந்தவொரு விண்ணப்பமும் செய்யப்படவில்லை!- வான் அசிசா

சின் பெங்கின் சாம்பல் மலேசியாவிற்குள் கொண்டு வர எந்தவொரு விண்ணப்பமும் செய்யப்படவில்லை!- வான் அசிசா

699
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் மலாயன் கம்யூனிஸ்ட் கட்சி (பிகேஎம்) தலைவர் சின் பெங்கின் சாம்பலை மலேசியாவிற்கு கொண்டு வருமாறு எந்தவொரு கட்சியிடமிருந்தும் அரசாங்கத்திற்கு எவ்விதமான கோரிக்கையும் வரவில்லை என்று துணை பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

இது குறித்து விசாரிக்க சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சின் பெங்கின் சாம்பலை மீண்டும் கொண்டு வருவது குறித்து எங்களுக்கு ஒருபோதும் கோரிக்கை அல்லது எதுவும் கிடைக்கவில்லை.”

#TamilSchoolmychoice

பிறர் மனதை நோகடிக்காது செயல்பட வேண்டும். ஒரு சிலரின் சேவைகளும் தியாகங்களும் உள்ளன. எனவே (விசாரணை) எவ்வாறு செல்கிறது என்பதைப் பார்ப்போம்என்று அவர் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

மலேசியாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரின் சாம்பல் மலேசியாவிற்கு சமீபத்தில் கொண்டு வரப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியபோது அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, சின் பெங்கின் சாம்பல் செப்டம்பர் 16-ஆம் தேதி நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக டி ஸ்டார் செய்தி வெளியிட்டிருந்தது.