Home One Line P2 சவுதி அராம்கோ : 3.7 மில்லியன் முதலீட்டாளர்கள்; 8.7 பில்லியன் டாலர்களுக்கான விண்ணப்பங்கள்

சவுதி அராம்கோ : 3.7 மில்லியன் முதலீட்டாளர்கள்; 8.7 பில்லியன் டாலர்களுக்கான விண்ணப்பங்கள்

935
0
SHARE
Ad

துபாய் : உலகின் மிகப் பெரிய நிறுவனப் பங்கு பொது விற்பனையாகக் கருதப்படும் சவுதி அராம்கோ நிறுவனத்தின் பங்குகளுக்கான விண்ணப்பத் தேதி இன்று வியாழக்கிழமையுடன் (நவம்பர் 28) நிறைவடைகிறது.

எனினும், இன்றைய இறுதி நாளுக்கு ஒரு நாளுக்கு முன்பாகவே, நேற்றுடன் 3.7 மில்லியன் முதலீட்டாளர்கள் உலகெங்கிலும் இருந்து இந்தப் பங்குகளுக்காக விண்ணப்பத்திருக்கின்றனர்.

தனிநபர்களாக இவர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களின் மதிப்பு 8.7 பில்லியன் டாலர்களாகும். இந்தத் தொகை இறுதி நாளோடு மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

தனது பங்குகளைப் பங்குச் சந்தையில் பட்டியலிட முனைந்திருக்கும் – சவுதி அரேபியாவின் ஏகபோக எண்ணெய் உரிமங்களைக் கொண்ட அராம்கோ நிறுவனத்தின் – மதிப்பு 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

200 பில்லியன் பங்குகளைக் கொண்டிருக்கும் அராம்கோ அதில் 1.5 விழுக்காட்டு பங்குகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க முன்வந்துள்ளது. இதில் 0.5 விழுக்காட்டுப் பங்குகள் தனிநபர்களுக்கும் ஒரு விழுக்காட்டுப் பங்குகள் நிறுவன முதலீட்டாளர்களுக்கும் விற்பனை செய்யப்படும்.

ஒரு பங்கின் விலை 30 ரியால் (8 அமெரிக்க டாலர்) முதல் 32 ரியால் வரை (அமெரிக்க டாலர் 8.53) விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

பொதுப் பங்கு விநியோகத்தின் மூலம் சுமார் 25 பில்லியனுக்கும் மேற்பட்ட முதலீட்டு நிதியை ஈர்த்து அந்தத் தொகையைக் கொண்டு எண்ணெய் அல்லாத தொழில்களில் முதலீடு செய்து, கூடுதலான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மாற்று வருமானங்களைக் கொண்ட நிறுவனமாக உருமாற்றவும் சவுதியின் ஆட்சியாளர் இளவரசர் முகமட் பின் சல்மான் முனைந்துள்ளார்.