Home One Line P2 ஈரான் தாக்குதலால் வீழ்ச்சியடைந்த சவுதி அராம்கோ பங்குகள்

ஈரான் தாக்குதலால் வீழ்ச்சியடைந்த சவுதி அராம்கோ பங்குகள்

722
0
SHARE
Ad

துபாய் – உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த பங்குகளாக மதிப்பிடப்படும் சவுதி அராம்கோ பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளிலிருந்து முதன் முறையாக கணிசமான அளவில் விலை வீழ்ச்சியைக் கண்டன.

சவுதி அராம்கோ பங்குகள் இன்று புதன்கிழமை 34 ரியால் விலையில் (9.06 டாலர்) பங்குச் சந்தை திறக்கப்பட்டபோது பரிமாற்றம் கண்டன. டிசம்பர் 11-ஆம் தேதி பட்டியலிடப்பட்ட பின்னர் இன்றுதான் ஆகக் குறைந்த விலையில் இந்தப் பங்குகள் பரிமாற்றம் கண்டிருக்கின்றன.

டிசம்பர் 12-ஆம் தேதி பங்குச் சந்தை விலையின் வழி 2.06 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக அறிவிக்கப்பட்ட சவுதி அராம்கோ நிறுவனம் அப்போது உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த நிறுவனமாகக் கருதப்பட்டது.

#TamilSchoolmychoice

ஆனால் இன்றைய விலைகளின்படி சவுதி அராம்கோ 1.82 டிரில்லியன் டாலர் மட்டுமே மதிப்பிடப்பட்டிருக்கிறது.

சவுதி அராம்கோவின் பங்குகள் பொது விற்பனை செய்யப்பட்டதன் மூலம் 25.6 பில்லியன் டாலரை அராம்கோ திரட்டியது. இதுவே பொதுப் பங்கு விற்பனையின் மூலம் திரட்டப்பட்ட உலகிலேயே மிகப் பெரிய முதலீடாகும்.

இதற்கு முன்னதாக சீனாவின் அலிபாபா 2014-இல் தனது பங்குகளை பொதுவிற்பனை செய்ததன் மூலம் 25 பில்லியன் டாலரைத் திரட்டியது.