Home One Line P1 “ஜாகிர் குறித்து அவதூறாக பேசவில்லை, வழக்குத் தொடுக்கப்பட்டால் சந்திக்கத் தயார்!” சார்லஸ்

“ஜாகிர் குறித்து அவதூறாக பேசவில்லை, வழக்குத் தொடுக்கப்பட்டால் சந்திக்கத் தயார்!” சார்லஸ்

899
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிள்ளாங் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கிடம் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். அவர் அவதூறான அறிக்கையை வெளியிட்டதாக சார்லஸ் மீது வழக்குத் தொடுக்க இருப்பதாக ஜாகிர் நேற்றைய வியாழக்கிழமை அறிக்கையில் மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சட்ட அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, சார்லஸை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் கூறுகையில், அந்த அறிக்கை அவதூறாக இல்லாததால், அவர் மன்னிப்புக் கேட்க எந்த காரணமும் இல்லை என்று கூறினார்.

ஜசெக தலைவர்கள் ஜாகிரை விமர்சித்ததால், தமிழீழ விடுதலைப் புலியுடன் தொடர்புடையவர்கள் என்று கூறி சொஸ்மா சட்டத்தின் கீழ் 12 நபர்களை கைது செய்ததாக கடந்த நவம்பர் 25-ம் தேதி சார்லஸ் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

ஜாகிரின் வழக்கறிஞர் தனது சட்ட அறிவிப்பில் இந்த அறிக்கையானது தீமையான நோக்கிலும், வெறுப்பால் தூண்டப்பட்டதாகவும் கூறினார்.

அந்த அறிக்கை இட்டுக்கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட அவர், மேலும் ஜாகிரின் நற்பெயருக்கு சேதம் விளைவித்ததாகவும், அவர் அவமதிப்பு மற்றும் ஏளனத்தை அனுபவித்ததாகவும் கூறினார்.

ஒட்டுமொத்தமாக எங்கள் கட்சிக்காரர் அளித்த அறிக்கையைப் படியுங்கள். நாடாளுமன்ற உறுப்பினராக எங்கள் கட்சிக்காரர் விசாரணை செயல்முறை, காவல் துறையினர் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கத் தவறியது மற்றும் சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்புகிறார்.”

மேலும், அவதூறு வழக்கில் தம்மை தற்காத்துக் கொள்ளவும் சார்லஸ் தயாராக இருப்பதாகக் கூறினார்.