Home கலை உலகம் குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கு- நடிகர் சல்மான்கானின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை

குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கு- நடிகர் சல்மான்கானின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை

601
0
SHARE
Ad
salman-khanமும்பை, ஏப்ரல் 8- கடந்த 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அதிகாலை மும்பையின் பாந்த்ரா பகுதியில் நடிகர் சல்மான்கான் குடிபோதையில் காரை ஓட்டிவந்தபோது, நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் மீது ஏற்றியதில் ஒருவர் இறந்துபோனார். நான்கு பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் சல்மானுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பினை எதிர்த்து, சென்ற மாதம் சல்மான்கான் சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மேல்முறையீடு குறித்த விசாரணை இன்று  அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி யு.பி,ஹெஜிப் தலைமையில் நடைபெறுகிறது.
சல்மான் நேரில் ஆஜராகவேண்டும் என்று எதுவும் கூறப்படாததால், அவரது வக்கீல்கள் இவ்விசாரணையில் கலந்து கொள்வர் என்று பத்திரிக்கை செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.