உலகிலேயே மிகப் பெரிய சூதாட்ட நாடாக மக்காவ் திகழ்கிறது.
ஆனால், கடந்த சில மாதங்களாக ஹாங்காங்கில் தொடர்ந்து வரும் மக்கள் போராட்டங்களால் மக்காவ் சூதாட்ட விடுதிகளின் வருமானம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மக்காவ்வின் நவம்பர் மாத சூதாட்ட வருமானம் சரிவடைந்திருக்கிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் சூதாட்ட வருமானம் 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் இது 8.5 விழுக்காடு வீழ்ச்சி என்றும் அரசாங்க புள்ளி விவரங்கள் தெரிவித்திருக்கின்றன.
ஹாங்காங் ஆர்ப்பாட்டங்கள் மட்டுமின்றி, சீனா-அமெரிக்கா இடையிலான வணிகப் போர், சீனாவில் பொருளாதார மந்த நிலை, மதிப்பு குறைந்து வரும் சீனாவின் யுவான் நாணயம், தென்கிழக்காசியாவில், குறிப்பாக சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருக்கும் சூதாட்ட மையங்கள், போன்ற காரணங்களும் சேர்ந்து கொள்ள மக்காவ் சூதாட்ட வருமானம் பாதிக்கப்பட்டது என ஊடகங்கள் தெரிவித்தன.