கோலாலம்பூர்: ஆர்எஸ்என் ராயர் அணிந்திருந்த திருநீற்றை கம்யூனிச தலைவர் சின் பெங்கின் சாம்பலுடன் இணைத்துப் பேசிய தேசிய முன்னணியின் பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினரான தாஜுடின் அப்துல் ரஹ்மான் இரண்டு நாட்களுக்கு நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்வதிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராயர் நெற்றியில் இட்டிருப்பது சின் பெங்கின் சாம்பலா என்று கேட்டபோது நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டது.
“அந்த சாம்பல் சின் பெங்கின் சாம்பலா?” என்று அவர் வினவினார்.
தாஜுடின் இந்து சமூகத்தை அவமதித்து விட்டதாக ராயர் மக்களவையில் தெரிவித்தார்.
“அவரை மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள். தேசிய முன்னணி இந்துக்களை அவமதிக்கிறது.” என்று அவர் கூறினார்.
பின்னர், தாஜுடின் தனது கருத்தினை மீட்டுக் கொண்டார். ஆயினும், தாம் அதனை வெறுமனே ஒரு கேள்வியாகக் கேட்டதாக அவர் கூறினார்.