Home One Line P2 சென்னையைச் சேர்ந்த சண்முக சுப்ரமணியன் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்ததாக நாசா தெரிவித்துள்ளது!

சென்னையைச் சேர்ந்த சண்முக சுப்ரமணியன் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்ததாக நாசா தெரிவித்துள்ளது!

1539
0
SHARE
Ad

புது டில்லி: விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து விட்டதாக நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த இருப்பிடத்தைக் கண்டு பிடிக்க உதவிய சென்னையைச் சேர்ந்த சண்முக சுப்ரமணியனுக்கும் நாசா நன்றியைச் தெரிவித்துக் கொண்டது.

நிலவில் தரையிறங்க 2 கிலோ மீட்டர் தொலைவில், இஸ்ரோ மற்றும் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதுஇதனையடுத்து லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோவிற்கு, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் உதவியது.

கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி சில புகைப்படங்களை நாசா வெளியிட்டது. அப்படங்களில் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டறிய, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனிடையே, லேண்டர் தரையிறங்கும் முன்பு அப்பகுதியில் எடுத்த புகைப்படங்களையும், நாசா எடுத்த புகைப்படங்களையும் ஒப்பிட்டு அடையாளப்படுத்தும்படி அது குறிப்பிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில்தான், சண்முக சுப்ரமணியன், நாசாவின் புகைப்படங்களை ஆராய்ந்து லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துள்ளார்.

லுனார் ரிகனைஸ்ஸான்ஸ் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரின் இருப்பிடம் அறியப்பட்டதாகக் குறிப்பிட்ட நாசா, விக்ரம் லேண்டர் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 750 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதை முதன்முதலாக சண்முக சுப்பிரமணியன் என்ற இளைஞர் கண்டறிந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.