Home One Line P1 “தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லுங்கள் – தொடர்ச்சியின் பெருமையை எடுத்துக் கூறுங்கள்” – வைரமுத்து...

“தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லுங்கள் – தொடர்ச்சியின் பெருமையை எடுத்துக் கூறுங்கள்” – வைரமுத்து அறைகூவல்

1173
0
SHARE
Ad

கோலாலம்பூர் – செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) மஇகா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் தனது ‘தமிழாற்றுப் படை’ நூல் அறிமுக விழாவில் கலந்து கொண்டு ஏற்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து ஏறத்தாழ ஒரு மணி நேரம் தனது சரளமான அழகுத் தமிழ் நடையில் நிறையக் கருத்துகளை முன்வைத்தார்.

தமிழின் மேன்மை குறித்து விவரித்த வைரமுத்து மலேசியத் தமிழர்கள் தங்களின் அடுத்த கட்டத் தலைமுறையினரும் தமிழைப் பற்றித் தெரிந்து கொண்டவர்களாக, அதன் மேன்மையைப் புரிந்து கொண்டவர்களாக உருவாக்கப்பட முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றார்.

“நான் பார்க்கிறேன். பிள்ளைகளுக்கு அழகான தமிழில் தேன்மொழி என்றும் கபிலன் என்றும் பெயர் வைத்திருக்கிறீர்கள். ஆனால், கபிலனுக்குத் தமிழ் பேசத் தெரியவில்லை. எத்தனையோ மொழிகள் வழக்கொழிந்து, இன்று பேசப்படாமல் அழிந்து போயிருக்கின்றன. ஆனால், தமிழ் அப்படியல்ல! அன்று தொல்காப்பியனும், வள்ளுவனும் பேசிய அதே தமிழை இன்றும் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பெருமை உலகின் எந்த மொழிகளுக்கும் இல்லை. இதனை உங்கள் பிள்ளைகளிடம் எடுத்துக் கூறுங்கள்! தமிழின் பெருமையை அவர்களும் உணர்ந்து கொள்ளச் செய்யுங்கள். தமிழ் மொழியின் மேன்மை அது பல்லாயிரம் ஆண்டுகள் மூத்த மொழி என்பதில் இல்லை. இன்றும் அதன் தொடர்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதில்தான் நம் மொழி மேலான மொழியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது” என தனதுரையில் வைரமுத்து முழங்கினார்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து நமது தமிழ்ப் புலவர்கள் பல கவிதைகளில் தமிழர்களின் பண்பாடுகளையும், அந்தக் கால கலாச்சார மேன்மைகளையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள் என்றும் கூறிய வைரமுத்து, தமிழாற்றுப் படை நூலை முழுமையாக உருவாக்க தமக்கு நான்கு ஆண்டுகள் பிடித்ததாகவும் கூறினார்.

நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்…