Home One Line P1 பிகேஆர்: இளைஞர் அணி மாநாட்டை அஸ்மின் அலி தொடக்கி வைக்கிறார்!

பிகேஆர்: இளைஞர் அணி மாநாட்டை அஸ்மின் அலி தொடக்கி வைக்கிறார்!

879
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சந்தித்துப் பேசிய பின்னர், பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலி, பிகேஆர் இளைஞர் மற்றும் மகளிர் காங்கிரஸை இன்று வியாழக்கிழமை மலாக்காவில் தொடக்கி வைப்பார் என்றும், டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் அதனை மூடித்து வைப்பார் என்றும் பிகேஆர் தகவல் தொடர்புத் தலைவர் பாஹ்மி பாட்சில் கூறினார்.

வெளியில் உத்தியோகபூர்வ விவகாரங்கள் இருந்தவர்களைத் தவிர அனைத்து தலைவர்களும் கலந்துகொள்வார்கள்என்று அவர் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஒரு வருடத்திற்கும் மேலாக எந்தவொரு பிகேஆர் கட்சிக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாத அஸ்மின், நேற்றைய கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.

பிகேஆர் இளைஞர் மற்றும் மகளிர் அணியின் ஆண்டுக் கூட்டத்தைத் தொடக்கி வைப்பது யாரென்ற கருத்து வேறுபாடுகள் சமீபத்திய பிரச்சனையாக அக்கட்சிக்குள் எழுந்தது.

இரு எதிரெதிர் குழுக்களுக்கிடையிலான உறவுகள் மீதான ஒடுக்குமுறை மோசமாகி, பல தலைவர்களை பதவி நீக்கம் செய்யவும் வழிவகுத்தது.

முன்னதாக, வான் அசிசா பிகேஆர் இளைஞர் அணி மாநாட்டைத் தொடக்கி வைப்பார் என்று கட்சி முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.