Home வணிகம்/தொழில் நுட்பம் அதிகூடிய சேமிப்புக் கொள்ளளவு உடைய ‘சீகேட்’ வன்தட்டுக்கள் அறிமுகம்

அதிகூடிய சேமிப்புக் கொள்ளளவு உடைய ‘சீகேட்’ வன்தட்டுக்கள் அறிமுகம்

543
0
SHARE
Ad

seagateகோலாலம்பூர், ஏப்ரல் 8- தற்போது காணப்படும் கணினிச் சேமிப்புச் சாதனங்களில் 1 டிபி (1TB)  அளவே மிகவும் உயர் சேமிப்புக் கொள்ளளவு உடையவையாக காணப்படுகின்றன.

எனினும் இவ்வாறான ஒன்றிற்கு மேற்பட்ட வன்தட்டுக்களை இணைத்து இந்த அளவை விடவும் கூடிய சேமிப்புக் கொள்ளளவை பெறக்கூடியதாகக் காணப்பட்டது.

ஆனால் தற்போது 4 டிபி (4TB)  கொள்ளளவை ஒரே வன்தட்டில் உள்ளடக்கியதாக சீகேட்  (Seagate) நிறுவனத்தின் வன்தட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 1 டிபி  (1TB)  கொள்ளவுடைய 4 பிளட்டர்கள் (Platters) காணப்படுகின்றன.

#TamilSchoolmychoice

இவை 1979ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது டெக்ஸ்டாப் கணினி வன்தட்டுக்களைக் காட்டிலும் 800,000 மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவற்றில் 450 மணித்தியாலங்கள் நீளமான  எச்டி ( HD) திரைப்படங்களை சேமிக்க முடிவதுடன், 1 மில்லியன் வரையான பாடல்களை சேமிக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது. தவிர தகவல் பரிமாற்றமானது  நொடிக்கு 146MB என்ற வீதத்தில் அமைந்துள்ளமை விசேட அம்சமாகும்.