Home One Line P1 “இனங்களை பொருட்படுத்தாமல் பிகேஆர் தொடர்ந்து மக்களுக்காக செயல்பட வேண்டும்!”- அன்வார்

“இனங்களை பொருட்படுத்தாமல் பிகேஆர் தொடர்ந்து மக்களுக்காக செயல்பட வேண்டும்!”- அன்வார்

774
0
SHARE
Ad

மலாக்கா: இனங்களை பொருட்படுத்தாமல் பிகேஆர் கட்சி மக்களுக்காக ஒருங்கிணைந்த கட்சியாக இருப்பதை உறுதி செய்ய அனைத்து பிகேஆர் தலைவர்களும் உறுப்பினர்களும் எழ வேண்டும் என்று டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.

இன்று சனிக்கிழமை பிகேஆர் தலைவராக தனது முக்கிய உரையை எதிரொலித்த அவர், பிகேஆரின் இலட்சியம், ஆரம்பத்தில் இருந்தே மக்களின் உரிமைகள் மற்றும் நிலையைக் குறித்து போராடுவதை அடிப்படையைத் தேர்ந்தெடுத்துள்ளது என்றும், மேலும் இவ்விவகாரத்தை பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், அவர் கூறினார்.

மாற்றத்தைக் கொண்டுவரும் முறையை பிகேஆர் கொண்டுள்ளது. ஒரு வலுவான தேசமாக நாட்டை உருமாற்ற சீர்திருத்தத்தை தொடர்ந்து கட்சி அமல்படுத்தும். பணக்காரர்கள், பணக்காரர்களாகவும், ஏழைகள் இன்னும் ஏழைகளாகவே இருப்பதை மாற்றியமைக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“அபிவிருத்தி திட்டங்கள் ஏழைகளின் தலைவிதியை மாற்ற வேண்டும். நாடு முழுவதிலும் உள்ள அனைத்து இனங்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மக்களை பேணும் அதே மனப்பான்மையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்,” என்று அவர் தமது கொள்கை உரையில் தெரிவித்தார்.

நாடு ஒரு வலுவான பொருளாதார வளர்ச்சியுடன் காப்பாற்றப்பட வேண்டும், ஏனெனில் இது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும். அரசாங்கத்தில் பதவியில் இருப்பது மக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கான நமது அணுகுமுறையை மாற்றக்கூடாதுஎன்றும் அவர் கூறினார்.